RSS

Oh Nenje Neethan – Darling Darling Darling

Advertisements
 
Leave a comment

Posted by on June 22, 2018 in Singings

 

Tags: , , , , , ,

Mandram Vantha Thendralukku – Mouna Ragam

 
Leave a comment

Posted by on June 16, 2018 in Singings

 

Tags: , , , , ,

Raja Raja Chozhan – Rettai Vaal Kuruvi

 
Leave a comment

Posted by on June 15, 2018 in Singings

 

Tags: , , , ,

Thendral Vanthu – Short Part2 – Avatharam

 
Leave a comment

Posted by on June 11, 2018 in Singings

 

Tags: , , , , , ,

Thendral Vanthu – Short Part1 – Avatharam

 
Leave a comment

Posted by on June 11, 2018 in Singings

 

Tags: , , , , ,

Aayarpadi Maaligaiyil – Sri Krishna Gaanan

 
Leave a comment

Posted by on June 8, 2018 in Singings

 

Tags: , , , , , ,

Thanga Sangili Minnum Paingil – Thooral Ninnu Pochu

 
Leave a comment

Posted by on June 4, 2018 in Singings

 

Tags: , , ,

Pottu Vaitha Oru Vatta Nila – Idhayam

 
Leave a comment

Posted by on June 1, 2018 in Singings

 

Tags: , , , , , ,

Raja Raja Cholan Naan – Rettai Vaal Kuruvi

 
Leave a comment

Posted by on May 27, 2018 in Singings

 

Tags: , , , , , , ,

Thene Thenpandi Meene – Udhaya Geetham

 

 
Leave a comment

Posted by on May 27, 2018 in Singings

 

Tags: , , , , , , , , ,

மரம்

தென்றல் வீச அசைபோடும்

உன் கிளைகள் ஓர் அழகு

பூக்கள் விடுத்து மலரும்

உன் புன்னகை ஓர் அழகு

காய் வளர்த்து கனி உதிர்த்திடும்

உன் தாய்மை ஓர் அழகு

வெப்பம் தாங்கி நிழல் தந்திடும்

உன் கருணை பேரழகு

 

என்னே உன் உயரம்!

என்னே உன் செழிப்பு!

பாரபச்சமற்ற உன் தன்மை

பல்லுயிர்க்கும் வீடானாய்

நான் சுவாசிக்கும் காற்றோ

நீ சுத்தீகரித்த ஒன்று

நான் வாழும் பூமியோ

நீ குளிர்வித்த சோலை இன்று

 

என் வீட்டுக் காவலானாய்

நான் உறங்க மடியானாய்

எந்தன் பொருளானாய்

எனக்கே உணவுமானாய்

உச்சி முதல் வேர் வரை

உன் சேவைக்கு கணக்கில்லை

 

வேர்களின் மூலம்

உன் சக இனத்தவரிடம்

உதவிடும் உன் பாங்கு

பேசிடும் உன் மொழி

காத்திடும் உன் கரங்கள்

ஆராய்ச்சியாளன் அறிவித்த ஆச்சர்யங்களில் ஒன்று

 

தென்றலின் மூலம்

நீ எழுப்பும் சலசலப்பின்

மொழி அறியேன் நான்

ஆனால் அதில் கோபம் இல்லை

என்பது மட்டும் என் திண்ணம்

 

இத்தனையும் நீ செய்தும்

விருதுகளும் பாராட்டும் ஏங்கும் இந்த உலகத்தில்

மாற்றம் ஏதும் இல்லாமல்

நீ நீயாக நின்றாயே!

நன்றி கூட பாராமல்…

 

ஓ மரமே!

உன்னிடம் ஒப்பிடுகையில்

நான் என்ன செய்தேன் இவ்வுலகிற்கு?

வெறும் பாரம்தான் என்பதனை

நன்குணர்ந்தேன் இப்பொழுது!

 

வெட்டினாலும் தடுக்காத உன்னை

ஆரத் தழுவி முத்தமிட

என் மனம் ஏங்குகிறது

நல்லவேளை நீ பேசுவதில்லை

ஒருவேளை உன்னைத் தவறாக

புரிந்து கொண்டு இருப்பேனோ என்னவோ

 

புத்தனே உன் அடியில் ஞானம் பெற

மனிதனும் உன் முன் சிறியவன்தான்

 

ஆனால் ஒன்று

உன்னை ஒருவேளை வளர்க்காமல் போனாலும்

வெட்டாமல் காப்பதுவே நான் செய்யும் கைமாறு

 

 

இரா. ராஜேஷ் குமார்

17 மே 2018.

நன்றி : ப்ரூஃ ரீடிங் – ஹம்ஸா ராஜேஷ் குமார் (என்றும் என் முதல் வாசகி, விமர்சகியும் கூட…)

 
Leave a comment

Posted by on May 18, 2018 in கவிதை

 

Tags: , , , , ,

வாழ்வியல் சூத்திரம்

நீ படித்தவன்

உன்னை மதிக்கிறேன்

நீ பண்பானவன்

உன்னிடம் பழகுகிறேன்

உன் அந்தஸ்து

என் மரியாதையின் அளவு

 

வாங்கியதை முடிந்தமட்டும் கொடுத்திடவும்

கொடுத்ததை தவறாமல் வாங்கிடவும்

பழகிய இந்த வாழ்வியல் சூத்திரம்

சூத்திரத்திரம் சமமானால்

உன்னோடு கைகோர்த்து

சூத்திரத்தில் பிழையென்றால்

பிரிவின் நிலைகொண்டு

இயங்கும் இந்த தன்மை

ரத்த பந்தத்திற்கும் பொருந்துமென்றால்

 

நண்பனும்

சுற்றத்தவரும்

ஊரார்

மட்டும் போதுமே

 

குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொள்ள

குடும்ப அமைப்பு என்பது தொழிற்சாலையா என்ன?

 

அப்படியானால்…

ரத்த பந்தங்களின் நம் நிலைப்பாடு

சடங்கிற்கும் சம்பிரதாயத்துக்கும்

கொடுக்கல் வாங்கல் என்ற நிலையில்

உப்பு சப்பற்ற

வெறும் பேச்சளவில்தான் என்பது

நிதர்சனமான ஓர் உண்மை.

 

 

இரா. ராஜேஷ் குமார்

4 ஏப்ரல் 2018.

நன்றி : ப்ரூஃ ரீடிங் – ஹம்ஸா ராஜேஷ் குமார் (என்றும் என் முதல் வாசகி, விமர்சகியும் கூட…)

 
Leave a comment

Posted by on April 4, 2018 in கவிதை

 

Tags: , , , , ,

இறுதி மரியாதை

உன் நெருங்கிய உறவுகளை

மேலும் நன்றாக வைத்திருக்க

மாற்றம் வேண்டும் என்றிருந்தால்

இன் நொடியே மாறிவிடு

மாரடித்துப் பயனில்லை

மாண்டவர் நிலை கண்டு

 

மாறாக

இருந்த வரையிலும்

நீ அவரைக் கையாண்ட விதம் எண்ணி

நீங்கள் வாழ்ந்த வாழ்வை போற்றி

மகிழ்ச்சியாக வைத்திருந்த தருணங்கள் பூரித்து

மெல்லியதாய்…

புன்னகைத்து வழியனுப்ப

துணிவென்பது உனக்கிருந்தால்

இன் நொடியே முத்தமிடு

நீ கடிந்தவரின் இதயத்தில்

 

அழுகை ஓலங்கள் அல்ல

அமைதியான புன்னகையைவிட

சிறந்த இறுதி மரியாதை

வேறு என்ன இருக்க முடியும்?

இறப்பு என்பது இயற்கையே

தவிர்க்க இயலாதது

 

ஆனால்…

கோபம்

கடுஞ்சொல்

ஆணவம்

பிரிவு

இயற்கையானாலும்

அப்படி அல்ல..

 

வேண்டுவது…

உன்னுள் ஓர் மறுமலர்ச்சியை

காலம் தாழ்த்தாதே

மரணம், காலம் நேரம் பார்ப்பதில்லை

வயது வரம்பற்றது

ஒவ்வொரு முறையும்

பத்திரமாகக் கையாள

உறவுகளும் கண்ணாடிகள்தான்

 

இரா. ராஜேஷ் குமார்

2 ஏப்ரல் 2018.

நன்றி : ப்ரூஃ ரீடிங் – ஹம்ஸா ராஜேஷ் குமார் (என்றும் என் முதல் வாசகி…)

 
Leave a comment

Posted by on April 2, 2018 in கவிதை

 

Tags: , , , , , , , , ,

புயலின் பெயர் ரோஹிங்கிய

இர்மா புயல் இன்று உலகின் தலைப்புச் செய்தியாக உள்ளது. சென்ற மாதம் ஆகஸ்டின் இறுதி வாரத்தின் துவக்கத்தில் ஹார்வி புயல் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரம் மற்றும் டெக்சாஸ் மாகாணத்தை புரட்டிப் போட்டு சுமார் முப்பதாயிரம் மக்களை இடம் பெயர வைத்தது. அதே சமயம் உலகின் மறுமுனையில் உள்ள மியான்மர் நாட்டில் லட்சத்திற்கும் மேலான ரோஹிங்கிய மக்கள் இடம் பெயர நேரிட்டது. இங்கு இடம் என்பது வெறும் ஊர் விட்டு ஊரோ, அல்லது மாநிலம் விட்டு மாநிலமோ கிடையாது, நாடு விட்டு நாடு. அதிலும் இது ஒரு புயலால் நேரிட்டது அல்ல, இயற்கை சீற்றத்தையும் மிஞ்சும் அளவுக்கு வக்கிரமும், சர்வாதிகாரமும் உடைய சக மனித மனங்கள் தான் என்பதில் ஆச்சர்யம் இல்லை.

rohingya

Courtesy: Web.

ரோஹிங்கிய மக்கள் யார்? இவர்களுக்கு ஏன் இந்தக் கொடுமை. சுருக்கமாகப் பார்ப்போம். மியான்மர் தேசம் 87.9% புத்த மதத்தை கொண்டுள்ளது. இதில் 4.3% இஸ்லாம் மதத்தை தழுவியவர்கள். ரோஹிங்கிய மக்கள்  பெரும்பாலாக இஸ்லாம் சமூகத்தை சார்ந்தவர்களாகவும், இந்து இனத்தை மிகக் குறைவாகவும் உடைய சிறுபான்மை இனத்தவர்களாக உள்ளனர் . கல்வி, வேலை வாய்ப்பு, சுதந்திரம் எதற்கும் உரிமை இழந்து, குடிஉரிமை அற்று மியான்மரின் ரஃக்ஹின் மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் 2013 ஆம் ஆண்டு ஐநாவால் உலகின் மிகவும் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினர் என்று விவரிக்கப்பட்டவர்கள்.  ரோஹிங்கிய கிளர்ச்சியாளர்கள் சிலர் பர்மிய எல்லை போலீஸ் போஸ்டை தாக்கியதற்கு பதிலடியாக எங்களின் ரோஹிங்கிய தாக்குதல்கள் என்று மியான்மர் ராணுவம் தரப்பாக ஒரு செய்தி. எதுவாக இருந்தாலும் பாதிக்கப்பட்டது அப்பாவி பொது மக்கள். கற்பழிப்பு, வீடுகள் சூறையாடப்படுவது, வீடுகளுக்கு தீ வைப்பது, கொலை என்று ரோஹிங்ய மக்கள் பட்ட துன்பத்துக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

மியான்மர் ராணுவத்துடன் கைகோர்த்து மியான்மரின் புத்த மத மக்களும் ரோஹிங்கிய மக்களை விரட்டி அடிப்பது மிகவும் அதிர்ச்சி தரும் தகவல். புத்த மதம் உலகிற்கு உணர்த்தியது ஒன்று, ஆனால் இன்று மதம் மட்டும் பெயரளவில் நிற்க, பல மியான்மர் புத்த மக்கள் பின்பற்றுவது வேறொன்று. இந்தக் கொடுமைகள் தாங்காமல் வீடிழந்து, உறவிழந்து, பொருளிழந்து, மானம் இழந்து ரோஹிங்கிய மக்கள் நடை பயணமாக , ஆறுகள் கடந்து வங்க தேசம் நோக்கி அகதிகளாக பயணம் மேற்கொள்கின்றனர். இதில் என்னை மிகவும் பதறவைத்தது, ஆற்றைக் கடக்கும் பொழுது குழந்தைகள் நீரில் மூழ்கும் செய்தி மனித சமூகம் போகும் திசையை கேள்விக்குறியாக ஆக்குகிறது.

ஐநா சபை உட்கார்ந்த இடத்தில் இருந்து ஒரு கண்டன அறிக்கை. உலகத் தலைவர்கள் அவரவர்களுக்கு ஒரு கண்டன அறிக்கை.  கண்டனம் மட்டும் தெரிவிக்க ஐநா சபை எதற்கு, உலகத் தலைவர் என்ற அந்தஸ்து எதற்கு? சாமான்ய மனிதனாலும் முடியும் ஒரு கண்டன அறிக்கையை விட. ஷேக்ஸ்பியரின் பிரசித்தி பெற்ற ஜூலியஸ் சீசர் வசனத்தையே இன்று மாற்றி அமைக்கும்படி செய்துவிட்டால் அவள், “நீயுமா ஆங் சான் சூ கி?!!” என்று. தினந்தோறும் ஊடகச் செய்தியை பார்பவர்க்கும், செய்தித்தாளை வாசிக்கும் பெரும்பாலான மக்களுக்கு, தேநீரின் சுவைக்கு நடுவே அதுவும் ஒரு செய்தியாய் மறைந்து போகிறது. ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் அதன் பிரச்சனைகள் அதன் தலைக்கு மேல் இருக்கிறது.

Rohingya-300x193

courtesy: Rohingya People who fled Myanmar to Bangladesh to escape violence (AP Photo/Anurup Titu)

உடனடியாக உன்னிடம் ஏதும் பகிர எனக்கு திறன் இல்லை என்றாலும், உனக்காகப் பகிர இப்பொழுது என் எழுத்து மட்டுமே உள்ளது ரோஹிங்கிய. உன்முன் சக மனிதனாக வெட்கித் தலை குனிகிறேன் என் இயலாமையின் நிலை கண்டு. ஒவ்வொரு மனிதனுக்கும் அவர் அவர் பிரச்சனைகள் , குடும்பம், வங்கிக் கடன்கள், அலுவலக வேலைகள், குழந்தைகள் எதிர்காலம் என பல. இவற்றிக்கு இடையில் உன்னை மீட்டெடுக்க ஒருவரும் இன்னமும் முன்வராது மனித சமூகத்தின் நாகரீக வீழ்ச்சியின் வளர்ச்சி அன்றி வேறு என்ன? எத்தனை காதலர்கள், எத்தனை அப்பாக்கள், எத்தனை அம்மக்கள், எத்தனை நண்பர்கள், எத்தனை உறவுகள், எத்தனை பிஞ்சு உள்ளங்களின் கனவுகள், அத்தனையும் உலகம் பார்வையிட மண்ணோடு புதைக்கப்படுகிறது. கொதிக்கிறது என் நெஞ்சம் ரோஹிங்கிய இனப் படுகொலைகள் கண்டு. உலகின் அடுத்துவரும் மாபெரும் புயலுக்கு உலகம் ரோஹிங்கிய என்று பெயரிடட்டும்.

References:

https://en.wikipedia.org/wiki/Rohingya_people

https://en.wikipedia.org/wiki/Myanmar

https://en.wikipedia.org/wiki/2016%E2%80%9317_Rohingya_persecution_in_Myanmar

http://www.bbc.com/news/world-asia-41187517

இரா. ராஜேஷ் குமார்

10 செப்டம்பர் 2017.

நன்றி : ப்ரூஃ ரீடிங் – ஹம்ஸா ராஜேஷ் குமார்

 
Leave a comment

Posted by on September 10, 2017 in கட்டுரை

 

Tags: , , , , , , , , ,

தட்டில் விழுந்த அமிர்தம்

கண்கள் உணவின் தோற்றம் ரசித்திட

நாசிகள் அதனின் நறுமணம் நுகர்ந்திட

செவிகள் அதன் தன் வாயிலைத் தாழிட

வாயால் நா அதை மென்று ருசித்திட

அதனுடன் கூடவே

எவ்வுலகிலும் சரி

எவ்வுயிரானாலும் சரி

உயிர்கள் பசியாற மனதால் வேண்டிட

 

தொலைக்காட்சி நிறுத்தி

கைபேசி காத்திருக்க

இசை ஒலி கூட அணைத்து

எண்ணங்களையும் தவிர்த்து

 

ஒரு நாள் இல்லை என்றாலும்

ஒரு பொழுது கூட இல்லை என்றாலும்

ஒரு கணமேனும் செய்து பார்

குடும்பத்துடன் அமர்ந்து உண்ண

 

தேவலோகத்தில் போய் அல்ல

பூலோகத்திலேயே உணரலாம்

கிடைத்ததில் அமிர்தத்தை

 

 

இரா. ராஜேஷ் குமார்

1 செப்டம்பர் 2017.

நன்றி : ப்ரூஃ ரீடிங் – ஹம்ஸா ராஜேஷ் குமார்

 
3 Comments

Posted by on September 1, 2017 in கவிதை

 

Tags: , , , , , , , , , ,

உன் இனியவனின் வணக்கம்

நாத்திகத்தில் ஆத்திக சாரம் கலந்து

ஆத்திகத்தில் நாத்திக பகுத்தறிவு புகுத்தி

இறுதியில்

ஆத்திக நாத்திக பேதமை மறைய

வள்ளுவனின் அறம் மட்டுமே எஞ்சி நிற்க

பாமரனும் அறியும் வண்ணம்

வேதத்தை புதிதாக்கினாய்

 

நீ பிடித்து வைத்த என்

மண்ணின் வாசனையை

எத்தனை முறை திறந்து பார்த்தாலும்

வாசம் மட்டும் குறைவதில்லை

அதுமட்டுமா

நாசிகள் அறியா வண்ணம்

ஒவொரு முறையும்

அது கண்களில் படர்ந்து

காதோரம் வருடிச்சென்று

இதயத்தில் தேங்கிவிடுகிறது

 

சிக்கலான ஒரு காதலை

கொச்சை இல்லாமல் எதார்த்தத்தில்

சர்ச்சையில்லாத உன் படைப்பிற்கு

என்றும் என் முதல் மரியாதை

 

அதுமட்டும் அல்ல

காதல்

திகில்

புரட்சி

உறவுகள்

என பட்டியல் நீளும்

உன் பன்முக இயக்கத் திறமைக்கு

 

நீ

திரையுலகில் ராஜா தான்

என் பாசத்திற்குரிய

பாரதி ராஜா!

 

 

இரா. ராஜேஷ் குமார்

13 ஆகஸ்ட் 2017.

நன்றி : ப்ரூஃ ரீடிங் – ஹம்ஸா ராஜேஷ் குமார்

 
Leave a comment

Posted by on August 26, 2017 in கவிதை

 

Tags: , , , , , , , , , , ,

தமிழே என் அமுதே

உலகின் தலைசிறந்த தத்துவவாதி
வள்ளுவன் என்றும்
உலகின் தலைசிறந்த தத்துவம்
அறம் செய விரும்பு
என்பதுவே என் கருத்து

ஔவையின் அறிவுரையில்
ஆரம்பித்தது என் கேள்வி
அறம் என்றல் என்ன என்று?

நன்மை அல்லது தருமமென
விளக்கங்கள் கிடைத்தன பொதுவாக
இருந்தும்
அழகான அந்த ஒற்றைச் சொல்
ஈர்த்தது என்னை வெகுவாக

விளக்கங்கள் போதாது என ஏங்கி நிற்க
விடைகாண வள்ளுவனின் திருக்குறளை நாட
முப்பாலின் முதல் பாலில்

வண்ணம் என்ற சொல்லிற்குள்
மறைந்திருக்கும் பல நிறங்கள் போல்

ஒன்றல்ல இரண்டல்ல அறத்திற்கு விளக்கங்கள்
முப்பத்தியெட்டாக அதிகார தலைப்புகளில்
விளக்கங்கள் கண்டவுடன்
திளைத்தது என் உள்ளம்
ஆனந்தத்தின் உச்சத்தில்

மெய்யுணர்தலே கடவுள் என
கடவுள் வாழ்த்து முதலாக
அன்புடைமை, விருந்தோம்பல்
ஈகை, புகழ்
அருளுடைமை, புலால் மறுத்தல்
கல்லாமை, வாய்மை என

இல்வாழ்விற்கு இருபத்தி நான்கென
தவ வாழ்விற்கு பதினான்கென
வரிசை படுத்தியதில் வல்லவன்
என் ஐயன் திருவள்ளுவன்

புராதன தமிழ் இலக்கியத்தில்
ஏழே வார்த்தை கொண்ட குறளிற்கு
ஈர் வரியில் தந்த விளக்கம் போதாது
குழம்பி நின்ற பொழுதுதான்
அலைந்து திரிந்து கிடைத்த ஒன்று
பரிமேலழகரின் பொக்கிஷ உரைநடை

பருகப் பருகத் திகட்டாத அந்த அமுதம்
தமிழ் நமக்குத் தந்த சாகா மருந்து

குழந்தை நடக்க ஓர் வருடமாக
இசையைப் பழக ஐ வருடமாக
வாழ்வை கற்க பல வருடமாக

அறங்கள் அனைத்தும் பழக
வாழ்நாள் ஆகுமென்றால்…
அறத்தை அரங்கேற்றுவது
எந்த மேடையிலோ?

ஜென்மம் கடைத்தேற
மதங்கள் கூறுவது கூறட்டும்
வள்ளுவா! உன்
அகராதிகள் ஒன்றே என்றும் போதுமானது

பெற்றோராய் குழந்தைக்கு பகிர்வதற்கு பல உண்டு
ஐஐடியும் ஹார்வர்டும்
கூகுளும் அமேசானும்
விளையாட்டும் இசை பயிற்சியும்
இதில் ஒன்று எப்பொழுதும்
அதில் தவறில்லை என்றாலும்
அறம் பழகுதல் பற்றியது
பகிர்வதில் என்றும் மிக நன்று

இரா. ராஜேஷ் குமார்

13 ஆகஸ்ட் 2017.

நன்றி : ப்ரூஃ ரீடிங் – ஹம்ஸா ராஜேஷ் குமார்

 
Leave a comment

Posted by on August 13, 2017 in கவிதை

 

Tags: , , , , , , , , , , , ,

கொடுத்து வைத்தவள் நீ

தன்னை முழுவதுமாக
ஏற்றுக்கொள்ளும் பக்குவம்
அனைவருக்கும் அமைவதில்லை
அதிலும் நீ ஓர் விதிவிலக்கு
அதனால் தான் சீலை உடுத்தி
சுதந்திரமாக வீதியில் வலம் வருகிறாய்

முகத்தில் சாயம் பூசிக்கொண்டாலும்
முகத்திரை அற்றவள் நீ!

விரும்பாமல் சமூகம் தூற்றினாலும்
விரும்பியபடி வாழ்பவள் நீ!

ஆக மொத்தம்
கொடுத்து வைத்தவள் நீ!

உன்னிடம் இருந்து கற்றுக்கொள்ள
பழிக்கும் சமூகத்திற்கு நேரமில்லை
அவர்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்

எதற்கும் கலங்காமல்
இளமையில் கல்வியும்
கல்வியால் வேலையும்
வேலையில் நேர்மையும்
உழைப்பால் உயர்வும்
கொண்டால்…

நீ அடியெடுத்து வைக்கும்
ஒவ்வொரு நிலையிலும்

பட்டங்களும் பதவிகளும்
உன் பாதங்களில்
பிச்சை கேட்கும்

சந்தேகம் வேண்டாம்
திருநங்கை சாதனையாளர்களே!
இதற்கு சாட்சி

 
2 Comments

Posted by on May 7, 2017 in கவிதை

 

Tags: , , , , , , , , , ,

கியூகென்ஹாஃப்இல் ஓர் அழகுத் திருவிழா

அழகில் சிறந்தது

எது என்ற கேள்வி

எழுந்ததும் உலகில்

சிறந்தவை வருமாறு

அறைகூவல் விடுத்துவைத்தேன்

 

தென்னவர் முருகனை முன்னிறுத்த

விண்ணவர் கண்ணனை துதிபாட

பறவைகள் ஆண் மயிலை அனுப்பிவைக்க

 

பொலிக்குதிரை என விலங்குகள் குதூகலிக்க

கோமாளி மீனும் என நீர் இனங்கள் துள்ளி எழ

வண்ணத்துப் பூச்சி என பூச்சிகளும் முணுமுணுக்க

உலக அழகியும் ஒய்யாரமாய் நடந்து வர

உலக அழகனும் அவள் பின்னே ஓடி வர

 

உலகில் உள்ள அழகை எல்லாம்

அணிவகுத்து நிற்கவைத்தேன்

ஹாலந்தின் கியூகென்ஹாஃப்

பூங்காவின் வழி நடுவில்

 

இவை அனைத்தையுமே அமைதியாக

புன்னைகைத்தபடி பார்த்திருந்தன

வழி நெடுகிலும் பூத்திருந்த

கியூகென்ஹாஃப் மலர் இனங்கள்

 

கண்கள் குளிர்ந்த அதன் வர்ணத்தில்

சுண்டி இழுத்த அதன் நறுமணத்தில்

தொட்டு உணர்ந்த அதன் ஸ்பரிசத்தில்

என் கேள்வி மறைந்த அந்த நொடிப்பொழுதில்

 

மலர்கள் என்னிடம் மௌனமாக உரையாடியது

 

அமைதியே என்றும் அழகின் மொழியென

புன்னகையே என்றும் அழகின் முகமென

மகிழ்ச்சியைத் தருவது அழகின் குணமென

அழகின் செயல் அதில் ஆரவாரம் இல்லையென

 

மலைத்து நின்ற அதன் பேரழகில்

விடைபெற நினைத்த அந்த கணப்பொழுதில்

யாராக இருந்தாலும் சரி

கியூகென்ஹாஃப் மலர்களின் முன்

மண்டியிட்டுத்தான் ஆக வேண்டும்

ஒரு புகைப்படமாவது எடுத்துக்கொள்ள

 

20170416_152210

 
2 Comments

Posted by on April 21, 2017 in கவிதை

 

Tags: , , , , , , , , , ,

திசை மாறிய பறவைகள்

மரபு வழி வழக்கங்கள் தோன்றியன பல

காலம் வழி புழக்கத்தில் இருப்பனவோ மிகச் சில

காக்கைக்கு அன்னமிடல் அதில் ஒன்று என்றாலும்

ஆன்றோர்கள் சொன்னார்கள் அது தினம் என்றும் நன்றாகும்

 

குளித்துவிட்டுச் சென்ற சமையலறையில் அவள்

சமைத்து வைத்து நின்ற பாத்திரத்தில்

அன்னக்கரண்டி கொண்டு அன்னத்தை அவன் எடுக்க

பருப்புடன் நெய் கலந்து சுவையுடன் உப்பும் சேர்த்து

சுத்தமான இடம் பார்த்து

நீர் தெளித்து ‘கா’ அழைக்க

காக்கையுடன் அதன் பின்னே புறாக்களும் வந்து நிற்க

 

பறவைக்கு முன் இட்டு

குழந்தைக்குப் பின் இடும்

இப்படி ஓர் நேர்த்தியை

அடடா…

கண்டதில்லை வேறு மண்ணில்

 

முதல் நாள் அவன் அழைக்க

மறுநாளும் அவன் அழைக்க

அவன் மூன்றாம் நாள் தாமதத்தால்

 

‘கா’ என்று உரிமையுடன்

காகம் அவனை உரக்க அழைக்க

உயிர்களின் பந்தத்திற்கு

மொழி ஏது? இனம் ஏது?

 

இப்படியும்

பல மாதங்கள் கடக்க

கோடை விடுமுறைக்கு ஒருநாள்

குடும்பத்துடன் ஊர் சென்றான்

 

வாரங்கள் சில கழிய

திரும்பிவந்து ‘கா’ அழைத்தும்

இட்டு இருந்த அன்னத்தில்

எறும்பு மொய்த்தது பல நாட்கள்

 

குழம்பி இருந்த நேரத்தில்

அவன் ஆழ் மனதில் தோன்றியது

சொல்லாமல் சென்றதுதான்

காரணம் என்று

 

அறிவில் சமன்பாடும்

மொழியின் பயன்படும்

இல்லாத காரணத்தால்

திசை மாறிய பறவைகள்

அதில் விந்தை இல்லை என்றாலும்

 

அறிவில் சமன்பாடும்

மொழியின் பயன்படும்

இவை அனைத்தும் இருந்தாலும்

சில

திசை மாறும் மனிதர்கள்

விந்தையிலும் விந்தை

 
6 Comments

Posted by on March 24, 2017 in கவிதை

 

Tags: , , , , , ,

 
%d bloggers like this: